
சென்னை: ‘மகாராஜா’ படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு, தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதற்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் 90 களில் இளைஞர்களை கவர்ந்த கனவுக்கன்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் நடிக்கும் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பல மொழிகளில் பிரபலமான விஜய் சேதுபதி, தெலுங்கில் ‘உப்பனா’ படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடித்தார். இப்படம் 1000 கோடி வசூல் செய்ததால், விஜய் சேதுபதியின் பங்கு அதிகரித்தது. ‘ஜவான்’ படத்திற்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.
பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் உடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி, அந்த படத்தில் ஒரு பிரபல நிகழ்ச்சியில், கத்ரீனா அழகாக இருப்பதாக கூறினார். இதனால் கத்ரீனா சற்று வெட்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி உள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது. பூரி ஜெகன்நாத், தெலுங்கில் மா்ஸ் என்டர்டெய்னர் படங்களுக்குப் பெயர் பெற்றவர். மேலும், இந்த படத்தில் 90 களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை தபுவும் சேர்ந்துள்ளார். தபு, ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், தற்போது ஒரு வெப் தொடரிலும், க்ரைம் த்ரில்லர் படங்களிலும் நடித்துவருகிறார்.
விஜய் சேதுபதி மற்றும் தபு ஆகிய இரண்டு பிரபலங்கள் சேர்ந்து நடிக்கும் இந்த படத்துக்கு நெட்டிசன்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இது, தபுவின் திரை உலகில் மீண்டும் வெற்றிபெறும் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.