புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடிகை தபு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பூரி ஜெகநாத் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை தபு முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வரும் தபு, கடைசியாக 2020-ல் வெளியான ‘அல வைகுந்தபுரமுலோ’ தெலுங்குப் படத்தில் நடித்தார்.