
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படம் தனது இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு விறுவிறுப்பாக நகர்கிறது. இந்த படம் விஜய்க்கு கடைசி திரைப்படமாக இருக்கலாம் எனக் கூறப்படுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அரசியல் சார்ந்த விஷயங்களை நேரடியாகத் தொடும் இப்படம், விஜயின் அரசியல் பயணத்துக்கும் அடித்தளமிடும் வகையில் பார்க்கப்படுகிறது.கடந்த வாரம் கொடைக்கானலில் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது சென்னையில் செட் அமைத்து, படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

ஹெச்.வினோத் ஜெட் வேகத்தில் படப்பிடிப்பை முடிக்க காரணம், விஜய் முழு நேர அரசியல்வாதியாக ஜூன் மாதம் முதல் செயல்பட உள்ளார் என்பதுதான். அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் நேரடியாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மே மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து, சில நாட்கள் டப்பிங் வேலைகளும் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
ஜூன் மாதத்திலிருந்து விஜய் தனது அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபட திட்டமிட்டுள்ளார். ஜனநாயகன் படத்தின் மூலம் அவர் தனது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் விஜய் ரசிகர்களுக்கும், அரசியல் வட்டாரத்துக்கும் இப்படம் மிகுந்த ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.