தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயகாந்த் 80-90களில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். அரசியலுக்கும் நுழைந்த இவர், உடல்நிலை காரணமாக அவரால் அரசியலில் முழு முயற்சி எடுக்க முடியவில்லை.
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும் பிரபல தொழிலதிபரின் மகள் கீர்த்தனாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இந்த நிகழ்வு நடந்து சில வருடங்கள் ஆன நிலையில், திருமண நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.
விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் திருமணத்தை தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. 2023 டிசம்பரில் விஜயகாந்த் இறந்தபோது அவரது குடும்பத்தினரும் தமிழகமும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
அவரது நினைவிடத்திற்கு ஏராளமானோர் வந்து தங்களின் பிரச்சனைகளைச் சொல்லி உதவி கேட்கிறார்கள். தற்போது விஜய பிரபாகரன் திருமணம் குறித்து புதிய தகவல் ஏதும் இல்லை. ஓராண்டு கழித்து விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.