சென்னை: பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
நாஞ்சில் விஜயன், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர். இவர் குறிப்பாக பெண் கெட்டப்பில் பல நிகழ்ச்சிகளில் தோன்றி ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு இவர் மரியா என்றவர் திருமணம் செய்து கொண்டார், மேலும் அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

புகார் மனுவில், கடந்த 15 ஆண்டுகள் விஜய் டிவியில் பணியாற்றி வந்ததாகவும், அதில் கடந்த 5 வருடங்களாக திருநங்கை மனுபெற்ற நாஞ்சில் விஜயனுடன் காதலித்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக அவர் புகார் அளித்துள்ளார்.
திருநங்கை பேட்டி: “திருமணமான பிறகும் பழகிக் கொண்டோம். ஆனால் கடந்த சில மாதங்களில் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. குழந்தை இருக்கிறது. அதனால் பழக வேண்டாம் என்று கூறினார். நான் திருநங்கை என்பதை தெரிந்து காதலித்தார், ஆனால் தற்போது அதைக் காரணமாக ஒதுக்குவதால் மனதுக்கு மிகுந்த வேதனை அடைந்தேன்” என அவர் கூறியுள்ளார்.