‘கோட்’ படத்துக்குப் பிறகு எச்.வினோத் இயக்கும் படத்துக்கு நடிகர் விஜய் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும்.
இது தொடர்பாக கேவிஎன் ஒரு மேஷ்-அப் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் எனத் தெரியாத நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. ஒருபுறம் விஜய் 69 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
விஜய்யுடன் மீண்டும் சிம்ரன் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களும் முடிவடைந்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், பிரதீப் இ.ராகவ் எடிட்டராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. முழுநேர அரசியலுக்கு வரும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
விரைவில் பட பூஜையை நடத்தி படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் வேலைகளை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதற்கு தகுந்தாற்போல் படக்குழுவினரும் வேலையை விரைந்து முடிக்க வேலையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.