தமிழ் சினிமாவில் இசை வெளியீட்டு விழாக்களில் பேசப்படும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களிடையே எப்போதும் டிரெண்டிங்காக இருக்கும். குறிப்பாக நடிகர்கள் பேசும் ஓவர் பேச்சுகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்படும். அந்த வரிசையில், நடிகர் விக்ரம் குறித்துப் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட கருத்துகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றியை எட்டவில்லை. இதை மையமாகக் கொண்டு அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என் படங்கள் ஓடாததற்கு நான் தான் காரணம். எனக்கு எதிரி யாரும் இல்ல” என பதிவிட்டார். இதற்குப் பிறகு பலரும் தங்களது ஆதரவையும் விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.
இணையவாசிகள் சிலர், விக்ரத்தின் முயற்சி, அர்ப்பணிப்பு போன்றவை பாராட்டுதலுக்கு உரியது என்றும், அவருக்கு பல விருதுகள் கிடைக்க வேண்டியவைகளே என்றும் தெரிவித்தனர். அதேவேளை, இன்னொருவர் அவரது படங்கள் ஓடாமல் இருந்தாலும் சம்பளம் ரூ.50 கோடிகள் என்ற கேள்வி எழுப்ப, அதற்கு மாறன்,”இளிச்சவாய் தயாரிப்பாளர்கள் உள்ளவரை சம்பளம் குறையாது” என பதிலளித்தார்.
இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. ஒருபுறம் ரசிகர்கள் விக்ரமின் அர்ப்பணிப்பை பாராட்ட, மறுபுறம் சிலர் தயாரிப்பாளர்களின் முடிவுகளையும் விமர்சிக்கின்றனர். இதுபோன்ற விவாதங்கள் தமிழ் சினிமாவில் நடிகர்கள் சம்பளம் மற்றும் பட வெற்றி ஆகிய விவகாரங்களை மீண்டும் மையமாக்கியுள்ளது.