சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல ஹீரோவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யாவை படக்குழு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹூரோவாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆர்யாவை, வில்லனாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் எவ்வித என்பதில் சந்தேகம் இல்லை.