நடிகர் விமலின் 35-வது படத்திற்கு ‘பெல்லடோனா’ என்று பெயர் வைத்துள்ளனர். சூப்பர்நேச்சுரல் ஹாரர் படமாக இப்படத்தை யூபோரியா பெலிக்ஸ் தயாரித்து வருகிறார். சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கும் இப்படத்தில் நாயகியாக தேஜஸ்வினி ஷர்மாவும், மற்றொரு நாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவனம் நடித்துள்ளனர்.
வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏசி ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறும்போது, “இந்தப் படம் விமலுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். இது வழக்கமான திகில் படமாக இருக்காது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்பூரி என 16 மொழிகளில் இந்த பிரமாண்ட படத்தை வெளியிட உள்ளோம்” என்றார்.