சூரி நடிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய “கொட்டுக்காளி” திரைப்படத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கறார் இயக்குநர் பாலா. சமீபத்தில் “வாழை” திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியில் கண்ணீர் சிந்திய இயக்குநர் பாலா, தற்போது “கொட்டுக்காளி” திரைப்படத்தைப் பற்றி கவுரவமாகக் கூறியுள்ளார்.
“இந்த திரைப்படம் உலகம் வியக்கும் கலைஞர்களின் ஆளுமைகளை நமக்கு உறுதியாகக் காட்டுகிறது” என்கிறார் பாலா. “வினோத்ராஜ் இயக்கிய ‘கொட்டுக்காளி’ ஒரு ஆழமான கதையை எளிமையாகவும் வலிமையாகவும் விவரிக்க முனைந்திருக்கிறார். சூரி, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, ஆற்றலுடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தி தாண்டவமாடியுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாலா மேலும், “அந்த நேரத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய அன்னா பென் மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக வலுப்படுத்தியுள்ளனர்” என்றார். ஒளிப்பதிவாளர் சக்திவேலுக்கு அவர் பாராட்டுகளைச் தெரிவித்தார்.
காட்சிகளை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் பாராட்டுக்குரியவர். வினோத்ராஜ் சார்பாக சிவகார்த்திகேயனுக்கு, எனது நன்றிகள். வினோத்ராஜ் மற்றும் சூரி போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, வணங்கப்பட வேண்டியவர்கள். ‘கொட்டுக்காளி’ படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்” என்று பாராட்டியுள்ளார்.