சென்னை: ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே. மாணிக்கம் தயாரித்த “ரெட் பிளவர்” படத்தில் விக்னேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நடிகரும் நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய விஷால்: படங்களுக்கு விமர்சனங்கள் தேவை. எதிர்காலத்தில், ஒரு படம் வெளியாகும் போது, முதல் 12 காட்சிகளுக்கு, அதாவது முதல் 3 நாட்களுக்கு, பொது விமர்சனம் என்ற பெயரில் யாரையும் நேர்காணல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தேவைப்பட்டால், அவர்கள் அதை திரையரங்கிற்கு வெளியே எடுத்துச் செல்லட்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் படத்தைப் பார்த்து தங்கள் சொந்த விமர்சனங்களை வழங்கட்டும். சினிமாவைக் காப்பாற்ற இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குனர் பி. வாசு, இயக்குனர் சுராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.