மும்பை: வசூலில் பெரிதளவில் அடிவாங்கியுள்ளது வார் 2. இந்த நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் ஸ்பை யூனிவெர்ஸ் ஒன்றை யாஷ் ராஜ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த யூனிவெர்சில் வார், பதான் மற்றும் டைகர் ஆகிய படங்கள் இணைந்துள்ளன. விரைவில் ஆல்பா படமும் இணையவுள்ளது.
கடந்த வாரம் யாஷ் ராஜ் ஸ்பை யூனிவெர்சில் இருந்து வெளிவந்த திரைப்படம் வார் 2. இயக்குனர் அயன் முகர்ஜி இப்படத்தை இயக்கியிருந்தார். ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் முதல் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடித்திருந்தார்.
வசூலில் பெரிதளவில் அடிவாங்கியுள்ளது வார் 2. இந்த நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக வார் 2 மாறியுள்ளது.