ஐதராபாத்: ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னர் கொந்தளித்துள்ளார்.
தெலுங்கில் ராபின்வுட் என்ற படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.
இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ராபின்வுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் இன்று ஐதராபாத் வந்தடைந்தார்.
இதனிடையே விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் வார்னர் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவில், விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்? என காட்டமாக தெரிவித்திருந்தார். மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாக வார்னரின் குற்றசாட்டுக்கு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.