சென்னை: 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘தக் லைஃப்’ படத்திற்காக ஒன்றாக இணைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மணிரத்னம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:- எங்கள் இருவரிடமிருந்தும் இன்னொரு ‘நாயகன்’ படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு, நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், எங்களை மன்னியுங்கள். நாங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்ய விரும்பினோம். அதிக எதிர்பார்ப்புக்கு அப்பால், இது வேறு வகையான எதிர்பார்ப்பாக மாறிவிட்டது. இவ்வாறு மணிரத்னம் கூறினார்.