பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
படம் வெளியாவதற்கு முன்பே ஓடிடி உரிமையை Netflix நிறுவனம் வாங்கியது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் வெளியிடப்படவில்லை. ஏனெனில் அதன் ஓடிடி உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, ’தங்கலான்’ படத்தின் ஓடிடி பதிப்பை தராமல் தாமதித்துள்ளது. குறிப்பிட்ட தேதி கடந்துவிட்டதால் வெளியிட முடியாது என்று ஓடிடி நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக ஒப்புக்கொண்ட விலையில் வெளியிட முடியாது என்றும், விலையைக் குறைத்தால் மட்டுமே வெளியிட முடியும் என்றும் படக்குழுவினருக்கு ஓடிடி நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. சீக்கிரம் நல்லபடியாக அமைந்தால்தான் ‘தங்கலான்’ படம் ஓடிடியில் வெளியாகும்.
Netflix உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாவிட்டால், மற்ற ஓடிடி நிறுவனங்களுக்கு கொடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது.