சுமார் 2 ஆண்டுகள் காலமாக தயாரிக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், இறுதியில் படக்குழுவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
2023. ஜூன் 16 அன்று வெளியான இந்த படம், ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. படம் வெளியான முதல் நாளிலேயே அது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. “ஆதிபுரூஷ்” என்ற பெயரில் வெளியான இந்த படம் 393 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஓம் ராவத் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்தனர். இயக்குநர் ஓம் ராவத் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், ஏனெனில் பல்வேறு சினிமா ரசிகர்கள் படத்தின்CGI தரம் மற்றும் கதாபாத்திரங்களின் முறையான உருவாக்கம் குறித்து விமர்சனங்களை எழுப்பினர்.
இந்த தோல்வி தயாரிப்பாளர்களுக்கு சுமார் 300 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் டி சீரிஸ் நிறுவனம் “அனிமல்” போன்ற வெற்றிப்படங்களின் மூலம் இந்த இழப்பை சமாளித்தது.சினிமாவில் எது வெற்றியடையும், எது தோல்வியடையும் என்பதை கணிக்க முடியாத நிலை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.