சென்னை : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால். படக்குழு தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.