சென்னை: விஜய் முத்தையா அறிமுகமாகும் `சுள்ளான் சேது’ படத்தின் டீசர் எப்போது என்று படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கிராமத்து பின்னணியுடைய படங்கள் மிகவும் அரிதாகி விட்டன. இதை எடுக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே எனலாம். கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன்,குட்டி புலி,விருமன், போன்ற படங்களே இதற்கு சாட்சி.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பனும்,விருமனும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்து வெளியான ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் படத்தில் சமுத்திரகனி மற்றும் பிரிகிடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி படத்தின் டீசர் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் இசையை ஜென் மார்டின் மற்றும் ஜிப்ரான் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.