மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் பல வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அதில், 2025-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது, மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் சில முக்கிய காட்சிகளை படமாக்கியிருக்கிறார் மிஷ்கின்.