பிக் பாஸ் 8ல் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ரானவ் இருவரும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 8 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி வரவிருக்கிறது.
இந்த நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் செம ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. பிக் பாஸ் 8ல் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வரப்போகிறார்கள், இதன் பெயர் வைல்டு கார்டு Knock out என குறிப்பிட்டுள்ளனர்.
இதில் வீட்டிற்குள் வரும் எக்ஸ் போட்டியாளர்கள், வீட்டிற்குள் உள்ள இரண்டு போட்டியாளர்களை replace செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் வரப்போகும் அந்த எக்ஸ் போட்டியாளர்கள் யார்யார், அவர்கள் யார் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற போகிறார்கள் என்பது தெரியாத நிலை நீடிக்கிறது.