மும்பை: அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை யார் என்று தெரியுங்களா? அதுபற்றி இணையத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.
நடிகை தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு ரூ.20 முதல் 25 கோடி வரை வாங்கி வருகிறார். கடந்த ஆண்டு வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருந்து வந்தார்.
இந்நிலையில், அவரை தற்போது பிரியங்கா சோப்ரா ஓவர்டேக் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. தற்போது இவர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக SSMB29 படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.