கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நான்கு படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியவர் நெல்சன். ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், விநாயக், தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனையடுத்து ஜெயிலர் 2 உடனடியாக உருவாகவுள்ளதாக தகவல்கள் பரவின.
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினியும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரஜினி வேட்டையன், லோகேஷ் இயக்கத்தில் கூலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது நெல்சன் சொன்ன கதையை அல்லு அர்ஜுன் விரும்பி, மேற்படி வேலைகளை தொடங்குமாறு கேட்டுக் கொண்டார்.