சென்னை: நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எம்புரான்’. இந்த பான் இந்தியா படம் மார்ச் 27-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் 2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரம் மற்றும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்திய வன்முறை தொடர்பான காட்சிகளை பிருத்விராஜ் வெளிப்படையாகக் காட்டியிருந்தார்.
இதையடுத்து படக்குழுவினருக்கு பாஜக மற்றும் இந்துத்துவா கட்சிகள் மிரட்டல் விடுத்தன. இதற்காக மோகன்லால் உடனடியாக மன்னிப்பு கேட்டார். மேலும், குஜராத் கலவர காட்சிகள் உட்பட இந்துத்துவா கட்சிகளை விமர்சிக்கும் 23 காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. அதே நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய வரிகளும் காட்சிகளும் அதே படத்தில் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் தமிழ்நாட்டின் உரிமைகளை கேள்விக்குட்படுத்தும் வகையிலும், தமிழர்களை காயப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டவை.

படத்தின் ஒரு காட்சியில் மஞ்சு வாரியர் கூறும்போது, ‘நாம் பிறக்கும் முன்பே ஒரு அரசன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு பயந்து 999 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நெடும்பள்ளி அணை கட்டப்பட்டது. அரசர்களும், ஆக்கிரமிப்புப் படைகளும் நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், ஜனநாயகத்தின் பெயரால் நம்மை ஒடுக்குகிறார்கள். இந்த அணையின் ஆபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற வரியும் உள்ளது, ‘அணையை பாதுகாக்க தற்காலிக சுவர்களால் எந்த பயனும் இல்லை.
அணையே இல்லாமல் இருப்பதே சிறந்த தீர்வு.’ மேலும், இதுபோன்ற சில வரிகள் இரு மாநில விவசாயிகளிடையே பிரச்னையை ஏற்படுத்துவதாகக் கூறி, மதுரை, தேனி மாவட்டங்களின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, கம்பத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன் திரண்ட விவசாயிகள் சங்கத்தினர், காந்தி சிலை அருகே உள்ள கோகுலம் சிட்பண்ட் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம், “அணை பலமாக உள்ளது, உடையாது என்று உச்ச நீதிமன்றமே பலமுறை கூறியும், அணை உடைவது மக்களுக்கு ஆபத்தானது என்ற வரிகள் உள்ளது.
தமிழகத்தில் பல கிளைகளை நடத்தி வருகிறார். ஆண்டு வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனம் இது. இந்த கிளைகளில் இருந்து மட்டும் 8 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலன் தமிழகத்திற்கு எதிராக படம் எடுத்துள்ளார். கேரளாவுக்கு எதிரான படத்தை தமிழகத்தில் தயாரித்து கேரளாவில் இப்படி திரையிடலாமா? அணைக்கு எதிரான காட்சிகளை எம்புரான் படத்தில் இருந்து நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோகுலம் சிட்பண்ட் நிறுவனங்கள் முன்பும், விவசாயிகள் சங்கங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், அமைப்புகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
தமிழக விவசாயிகளிடம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் எம்புரான் படத்தை தமிழக அரசு தடை செய்ய வலியுறுத்துவோம்” என்றார். பா.ஜ.க.வுக்கு பயந்து, மோகன்லால் அவசரப்பட்டு மன்னிப்பு கேட்டதற்கு பயந்து, குஜராத் கலவர காட்சிகளை உடனடியாக நீக்கிய ‘எம்புரான்’ படக்குழு, தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.