கேஜிஎஃப் திரைப்படத்தின் வெற்றியால் உலகளவில் பிரபலமான நடிகர் யாஷ், தற்போது பிரமாண்டமான ‘ராமாயணம்’ படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். நிதேஷ் திவாரி இயக்கும் இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்துக்காக யாஷுக்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேஜிஎஃப் வெற்றியின் தாக்கம்வெறும் 300 ரூபாயுடன் திரைப்பட உலகிற்குள் நுழைந்த யாஷ், அவரது கடின உழைப்பால் இன்று உலக அளவில் வியந்து பார்க்கப்படும் நடிகராக உயர்ந்துள்ளார். கேஜிஎஃப் படத்தினால் யாஷின் புகழும் அவரது சம்பளமும் உயர்ந்தது. கேஜிஎஃப் பாகம் 2, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, யாஷின் நடிப்பு ரசிகர்களை மெய்மறக்க செய்தது.
ராவணனுக்கு உயர்ந்த சம்பளம்சாதாரணமாக ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் போது, ‘ராமாயணம்’ படத்தில் வில்லனாக நடிக்கிற யாஷுக்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்படுவது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கோலிவுட்டில் விஜய், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன், மற்றும் கன்னட சினிமாவில் யாஷ் ஆகியோர் இந்திய திரைப்பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களாக இருக்கின்றனர்.இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட், தொழில்நுட்ப தரம், மற்றும் நடிப்பின் தரத்தால் இதுவும் பிரம்மாண்ட வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.