ஜீ தமிழ் சேனலின் புதிய மெகா சீரியல் ‘மௌனம் பேசியதே‘ மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒரு ஜோடி விருப்பத்துடன் திருமணம் நடக்கிறது, இன்னொரு ஜோடிக்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடக்கிறது. ஒரு பேருந்து விபத்தில் தம்பதிகள் மாறி வாழ்வில் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறது. அதைத் தொடர்ந்து வரும் சவால்கள்தான் கதைக்களம். இந்த ‘மௌனம் பேசியதே‘ சீரியல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால், திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரே நேரத்தில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.