சென்னை: குழந்தைகளின் உடல் நலனை பேணி காக்க வேண்டும். அவர்களுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் மிக்ஸ்டு ஃப்ரூட் சேர்த்து குழிப்பணியாரம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – அரை கிலோ
வாழைப்பழம் – 2 (பெரியது)
ஸ்ட்ராபெரி – 1 கப்
தேன் – தேவையான அளவு
சப்போட்டா – 1 கப்
மாதுளம் பழம் – 1 கப்
ஆப்பிள் – 1 கப்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை: ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். கோதுமை மாவில் தேவையான அளவு நீரை ஊற்றி கரைத்துக் கொள்ளவேண்டும்.
வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து, கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக தேவையான அளவு நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கரைத்து, ஊற வைக்கவேண்டும்.
பின்னர், மவை பணியாரக்க குழிக்குள் ஊற்றுவதற்கு முன்பாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை நறுக்கி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மாவுடன் சேர்த்து பிசைந்துகெள்ளவேண்டும்.
பணியாரக்குழிக்குள் மாவை ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுத்து பரிமாறவும். சூப்பரான சத்தான மிக்ஸ்டு ஃப்ரூட் கோதுமை குழிப்பணியாரம் ரெடி. பணியாரத்தை தேனில் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது, பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.