இன்றைய சமையலறைகளில் ஏர் ஃப்ரையர் ஒரு அவசியமான சாதனமாகிவிட்டது. எண்ணெய் சேர்க்காமல் மொறுமொறுப்பான உணவுகளை சமைக்க முடியும் என்பதால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். எண்ணெயில்லாமல் கோல்டன் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் அல்லது ப்ரோஸ்டட் சிக்கன் செய்வது ஆரோக்கியமாக தோன்றினாலும், உண்மையில் அது முழுமையாக ஆரோக்கியம் தருமா என்பதை நிபுணர்கள் கேள்விக்குறி எழுப்புகின்றனர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை-குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, “ஏர் ஃப்ரையர் உங்களுக்குப் பயன் தருமா என்பது அதை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் உள்ளது” என்கிறார். ஏர் ஃப்ரையர் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது உண்மை தான். ஆனால், அதே நேரத்தில் நீங்கள் இன்னும் frozen snacks அல்லது refined oil போன்றவற்றை அதிகம் பயன்படுத்தினால் அது குடல் ஆரோக்கியத்திற்கு எந்த உதவியும் செய்யாது என்று எச்சரிக்கிறார்.
சிறிதளவு ஆரோக்கியமான எண்ணெய்கள், உதாரணமாக அவகேடோ ஆயில் அல்லது நெய், வைட்டமின்கள் உறிஞ்ச உதவுகின்றன. ஆனால் refined seed oils அதிகம் பயன்படுத்தினால் அது உடலில் inflammation-ஐ ஏற்படுத்தும். அதனால், முழுமையாக எண்ணெய் தவிர்ப்பது தேவையில்லை, சரியான வகை எண்ணெயை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
ஏர் ஃப்ரையரில் எந்த காய்கறியையும் சமைக்கலாம். ஆனால் கீரைகள் மற்றும் ப்ரோக்கோலி போன்றவை வேகமாக கருகிவிடும். ஆகவே அவற்றை லேசாக எண்ணெய் தடவி parchment paper அல்லது silicon liner உடன் சமைப்பது நல்லது. burnt food குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதே எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது. அதிக வெப்பத்தில் பழைய எண்ணெய் oxidized fats உருவாக்கி கல்லீரல் மற்றும் குடலுக்கு பாதிப்பு தரும். எனவே ஒவ்வொரு முறையும் ட்ரேவை சுத்தம் செய்து புதிய எண்ணெயை பயன்படுத்துவது சிறந்தது.
ஏர் ஃப்ரையர் லைனர்கள் உணவை ஒட்டாமல் தடுத்து சுத்தம் செய்ய சுலபமாக்குகின்றன. BPA இல்லாத, FDA அங்கீகரித்த உணவு தர சிலிகான் அல்லது bleach செய்யப்படாத parchment paper-ஐ தேர்ந்தெடுக்கலாம். இவை பாதுகாப்பானவை மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.
ஆனால் அனைத்து ஏர் ஃப்ரையர்களும் ஒரே மாதிரி அல்ல. சிலவற்றில் டெஃப்ளான் கோட்டிங் இருக்கும், அது அதிக வெப்பத்தில் சிதைவடையும். ஆகவே ceramic coating அல்லது stainless steel interior கொண்ட ஏர் ஃப்ரையரை தேர்வு செய்வது ஆரோக்கியத்துக்கும் நீடித்த பயனுக்கும் நல்லது.
நிபுணர்களின் கருத்துப்படி, ஏர் ஃப்ரையர் முறையாகப் பயன்படுத்தப்படும் போது அது குடல் ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் உதவக்கூடிய ஒரு கேம் சேஞ்சர் ஆக இருக்கலாம்.