சென்னை: பிளம்ப் கேக்கை நீங்களே வீட்டில் தயார் செய்ய விரும்புகிறீர்களா. இதோ பிளம்ப் கேக் செய்வதற்கான செய்முறையை பாருங்க.
தேவையான பொருட்கள். மைதா -100 கிராம், ஓமம் தூள் – அரை டீ ஸ்பூன், திராட்சை – 30 கிராம், சுக்குத் தூள் – அரை ஸ்பூன், வெண்ணெய் – 100 கிராம், பால் – 1/4 கப், சர்க்கரை – 100 கிராம், சோள மாவு – 2 ஸ்பூன், முந்திரி பிஸ்தா வால்நட்- 40 கிராம், முட்டை – 3, செர்ரி பழம் நறுக்கியது – 50
செய்முறை: சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும். கட்டி தட்டாமல் இருக்க வேண்டியது அவசியம். மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும்.
இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். முட்டையை நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்க்கவும். தயாரித்த கலவையை ஏற்கெனவே கொதிக்க வைத்த பாலில் போட்டு கலக்கவும்.
பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும். பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில், கேக் கலவையை பாதி ஊற்றவும். சிறு துண்டுகளாக நறுக்கிய செர்ரி பழங்களை போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் அவனில் 40 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான பிளம்ப் கேக் ரெடி.