தேவையான பொருட்கள்:
1 கப் மைதா
4 தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை
1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
உப்பு ஒரு சிட்டிகை1 முட்டை
1 1/2 கப் பால்
25 மில்லி எண்ணெய்
1 வாழைப்பழம், பிசைந்தது
1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
1 டீஸ்பூன் தேன்
1 தேக்கரண்டி வெண்ணெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து, அதனுடன் வெண்ணெய், தேன் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். அதை அனைத்தையும் நன்றாக அடித்து கலக்கிக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மசித்த வாழைப்பழத்தை சேர்க்கவும். நன்றாக கலக்கு.
இப்போது தனியாக ஒரு சல்லடையில் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலிக்கவும். பின்னர் இதை முன்னர் ரெடி பண்ணிய நீர்மக்கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். மொத்தமாக கொட்டினால் கட்டிகள் விழும். கட்டிகள் எதுவும் உருவாகாமல் இருக்க நன்றாக பொறுமையாக கலக்கவும். பின்னர் இந்த கலவையில் பால் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் வரும் வரை கிளறவும்.
இப்போது ஒரு கடாயை சூடாக்கி, ஒவ்வொரு கேக்கிற்கும் தோராயமாக 1/4 கப் எடுத்து அதை கடாய் மீது மீது ஊற்றவும் .அப்பத்தை போல திக்காக ஊற்றி அதை வேகா விடவும். பின்னர் அதை பிரட்டி போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சமைக்கவும். மேலே வெட்டப்பட்ட வாழைப்பழத் துண்டுகளுடன் கிரீம், ஐஸ்கிரீம், பீனட் பட்டர், நட்ஸ் அல்லது மேப்பில் சிரப் ஊற்றி பரிமாறலாம். முடிந்தால் வாழைப்பழத்தை வைத்தே ஒரு சாஸ் செய்து அதனோடு பரிமாறுங்கள்.