தேவையானவை:
மோர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு.
வாழைத்தண்டு – சிறிய துண்டு
செய்முறை:
வாழைத்தண்டை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு சாறு எடுக்கவும். மோர், உப்பு சேர்த்து குடித்து வந்தால், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டு மோர் மட்டும் அருந்த விரும்பாதவர்கள் அரை கப் பிரவுன் ரைஸ் கஞ்சி அல்லது பச்சை அரிசி கஞ்சியுடன் கலந்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இட்லி இருந்தால், அதையும் சிறு துண்டுகளாக உடைத்து, வாழைத்தண்டு மோரில் சேர்க்கலாம். வாழைத்தண்டுக்கு பதிலாக வாழைப்பூவை மிக்ஸியில் கலந்து சாறு எடுத்து அதனுடன் மோர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட பெண்களுக்கு கருப்பை சம்மந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.