சென்னை: இயற்கை பொருட்களில் உள்ள மருத்துவ குணங்கள்… கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்.
கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி, வாய்ப்புண் குணமாகும். சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட உதடு வெடிப்பு, உதட்டுப்புண் குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலையின் 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும். ஒரு பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்க வைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.
மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும். மணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1 நாளைக்கு 6 முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்.
மருதாணி இலைகளை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு, வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும். ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் நீங்கும். சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம், வாய்ப்புண் குணமாகும்.