மசாலா பொடிகள்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
வதக்க:
காலிஃபிளவர் – 1 கப்
பூண்டு – 3 பல்
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
கொண்டைக்கடலை – 1 கப் (தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்தது)
இஞ்சி – 1 அங்குலம் (துருவியது)
கிரீம் – 1/3 கப்
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அனைத்து மசாலா பொடிகளையும் எடுத்துக் கொள்ளவும். பின் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும். காலிஃபிளவரை தனியாக வைக்க வேண்டும். பிறகு வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி, இஞ்சியை துருவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மசாலா பொடிகளை சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறவும். பிறகு காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் கிளறி மசாலா பொடிகள் காலிஃப்ளவரில் சேரும். பிறகு கடலைப்பருப்பு, தக்காளி சாஸ் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்கவிடவும். மசாலா மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து க்ரீம் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா ரெடி.