தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
ரவை – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மேகி – 1 பாக்கெட்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மேகி மசாலா
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கு ஏற்ப
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மேகியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும். பிறகு அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்க வேண்டும். பிறகு மிளகாய்த்தூள், சுவைக்கு உப்பு, மேகி மசாலா, சிறிது நறுக்கிய கொத்தமல்லி மற்றும் தோசை மாவு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலக்கிய மாவை அல்லி ரவாவுடன் சேர்க்கவும். தோசைக்கு ஊற்றுவது போல் ஊற்ற வேண்டும். பின் எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சுவையான மேகி தோசை ரெடி. இந்த தோசையை திருப்பி போட்டு வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை.