இட்லி, தோசை போன்றவற்றை சட்னி இல்லாமல் சாப்பிடும் சூழ்நிலையில், கடைகளில் வாங்கும் இட்லி பொடியை மாற்றாக, வீட்டிலேயே சுவையான தேங்காய் பூண்டு இட்லி பொடியை தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சரியான முறையில் செய்தால் இரண்டு மாதங்கள் வரை எந்த மாற்றமும் இல்லாமல் நன்றாக இருக்கும்.

இந்த பொடியை செய்ய தேவையான பொருட்கள் ஒரு கப் துருவிய தேங்காய், ஏழு பூண்டு பற்கள் (மசித்தது), நான்கு டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு, பத்து வரமிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய், முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், துருவிய தேங்காயை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வரமிளகாயை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பூண்டு பற்களையும் எண்ணெயில் போட்டு லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். அனைத்தையும் தனித்தனியாக வறுத்த பிறகு, மிக்ஸியில் தேங்காய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். பின்னர், அரைத்த கலவையில் வறுத்த தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்தால், சுவையான தேங்காய் பூண்டு இட்லி பொடி ரெடி.
இந்த பொடியை எப்போது வேண்டுமானாலும் இட்லி, தோசையுடன் பரிமாறலாம். சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் கலந்து அரோமாவாக இருக்கும். இந்த தேங்காய் பூண்டு இட்லி பொடியை தக்காக வைத்தால், இரண்டு மாதங்கள் வரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். இது மட்டுமல்லாமல், பூண்டு ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாகவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். கடைகளில் வாங்கும் பொடிகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த ஹெல்த்தி ரெசிப்பியை செய்து பாருங்கள்.