தேவையான பொருட்கள்:
கடலை மாவு – அரை கப்
சிவப்பு மிளகாய் – 5
அரிசி மாவு – 4 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
வறுத்த வேர்க்கடலை – 1 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை: முதலில் பூண்டு மற்றும் சிவப்பு மிளகாயை தண்ணீரில் கால் மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் வராமல் நன்கு பிசையவும். பிறகு வேர்க்கடலையை சேர்த்து வதக்கவும். கடைசியாக கடாயை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும், பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான, மொறுமொறுப்பான கடலை பக்கோடா ரெடி!!