தேவையானவை:
கேக் மசாலா – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 3 தேக்கரண்டி
சோடா உப்பு – ½ தேக்கரண்டி
வெண்ணெய் – 200 கிராம்
செர்ரி – 50 கிராம்
மைதா – 300 கிராம்
பால் – 100 மில்லி
தூள் சர்க்கரை – 250 கிராம்
முட்டை – 3
முந்திரி, திராட்சை, பிஸ்தா, வெண்ணிலா எசன்ஸ் – சில துளிகள்.
கோகோ – 1 தேக்கரண்டி
செய்முறை: முதலில், மைதா மாவு, சமையல் சோடா, பேக்கிங் உப்பு மற்றும் கேக் மசாலா ஆகியவற்றை ஒரு சல்லடையில் ஒன்றாகக் கலந்து 3 முறை சலிக்கவும். பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். முட்டைகளை நுரை வரும் வரை அடிக்கவும். சலித்த கலவையில் அடித்த முட்டைகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இவற்றுடன் கோகோ, பால், கேரமல் சர்க்கரை, எசன்ஸ் சேர்த்து கலக்கவும். இறுதியாக, மாவில் தூவப்பட்ட செர்ரி, திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து, ஒரு பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, அடுப்பில் சுடவும். வெந்ததும் இறக்கி விருப்பப்படி ஐசிங் கொண்டு அலங்கரிக்கவும்.