வாங்கி வைத்த எலுமிச்சை சில நாட்களில் காய்ந்து கருகிப்போனால் அதை வீணாகிவிட்டது என நினைத்து தூக்கி எறிவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த எலுமிச்சைகளும் வீட்டில் பல வேலைகளுக்கு பயன்படுகின்றன.
காய்ந்த எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக நறுக்கி காய்கறி நறுக்கும் பலகை அல்லது பாத்திரம் கழுவும் சிங்கை சுத்தம் செய்யலாம். இது இயற்கையான சுத்திகரிப்பானாக செயல்பட்டு பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.

அதேபோல காய்ந்த எலுமிச்சையில் உள்ள மணம் குறையாது. அதை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து பேக்கிங் சோடாவுடன் கலந்து ஃபிரிட்ஜ், ஷூ ராக், கப்போர்டு போன்ற இடங்களில் வைத்து விட்டால் துர்நாற்றம் நீங்கி புதிய வாசனை வீசும்.
பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்களை பளபளப்பாக்கவும் காய்ந்த எலுமிச்சை உதவும். சாறை பிழிந்து அவற்றை தேய்த்தால் புது மாதிரி ஜொலிக்கும்.
மேலும் மைக்ரோவேவ், கெட்டில், ஏர் ஃபிரையர் போன்றவற்றை சுத்தம் செய்ய எலுமிச்சை சாறு சிறந்தது. நன்கு சுத்தம் செய்து காய வைத்து வைத்தால் பழைய துர்நாற்றம் நீங்கி எப்போதும் ஃபிரெஷ் மணம் வரும்.
ஆகவே காய்ந்த எலுமிச்சையை எறிந்து விடாமல், இப்படி பல பயன்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.