தேவை:
தாமரை பூ தண்டு – 10,
துருவிய தேங்காய் – ½ கப்,
து . பருப்பு – 50 கிராம்,
வெங்காயம் – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்க தேவையான அளவு,
உப்பு – சுவைக்கேற்ப,
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, துருவிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் காய்ந்த தாமரைப்பூ, ஊறவைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் தெளித்து கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றியதும் தாமரை பூ பொரியல் தயார்.