இந்தியாவின் உணவு கலாச்சாரம் உலகளவில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. தானியங்கள், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், காய்கறிகள் என ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இந்திய சமையலின் அடிப்படையாக உள்ளன. ஆனால் மருத்துவர்களின் பார்வையில் பிரச்சனை உணவுப் பொருளில் அல்ல, அதை எப்படிச் சமைக்கிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் தவறு நிகழ்கிறது. அதிக எண்ணெய், நெய், பொரியல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் பயன்படுத்தப்படுவதால் உணவின் ஆரோக்கிய பலன்கள் குறைகின்றன.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது, ஆழமான பொரியல் சாப்பிடுவது, மலாய் மற்றும் வனஸ்பதி போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் சேர்ப்பது போன்ற பழக்கங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இதனால் நல்ல காய்கறிகளும் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையில் மாறுகின்றன. மேலும், சட்னி, சாஸ், இனிப்பு வகைகளில் உள்ள மறைமுகச் சர்க்கரைகள் கூட கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கின்றன.
இந்திய உணவு கலாச்சாரம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், வாழ்க்கை முறையில் செயல்பாட்டின்மை, இரவு தாமதமாக உணவருந்துதல் போன்ற காரணிகள் பிரச்சனையை அதிகரிக்கின்றன. கொலஸ்ட்ரால் தானாகவே தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் LDL அளவு அதிகமாகவும் HDL அளவு குறைவாகவும் இருந்தால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே சமையல் முறைகளிலும், உணவுப் பழக்கங்களிலும் மாற்றம் கொண்டு வருவது அவசியமாகிறது.
கொழுப்பு குறைந்த உணவு முறையை பின்பற்றுவதற்கு ஓட்ஸ், பழங்கள், காய்கறிகள், நட்ஸ், கிரீன் டீ போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பொரியல் சாப்பிடுவதற்கு பதிலாக கிரில்டு அல்லது steam செய்யப்பட்ட உணவுகளைத் தேர்வு செய்வது சிறந்தது. அதிக நெய், எண்ணெய், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்து, ஆரோக்கியமான பாரம்பரிய உணவு முறையைத் தழுவினால் இதய ஆரோக்கியமும் கொலஸ்ட்ராலும் கட்டுப்பாட்டில் இருக்கும்.