கெட்ட கொலஸ்ட்ரால் நமது இதய ஆரோக்கியத்திற்கு எதிரியாக கருதப்படுகிறது. ஏனென்றால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இதய நோய், மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. மாரடைப்பு அதிகரிக்கும் அபாயம்: கெட்ட கொலஸ்ட்ரால் உடல் முழுவதும் நரம்புகளில் அடைப்புகளை அதிகரித்து இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்த பிறகு கண் தொடர்பான சில பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இதேபோல், தோல் மாற்றங்கள், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை போன்ற பிரச்சனைகளும் கெட்ட கொலஸ்ட்ராலின் அறிகுறிகளாக இருக்கலாம். உடலில் அதிகப்படியாக கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால், அது அமைதியான முறையில் இதய நோய்கள் வரும் ஆபத்தை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ள ஒருபோதும் மறக்காதீர்கள்.
உங்கள் உணவு அட்டவணை மற்றும் வாழ்க்கைமுறையில் எப்போதும் கவனமாக இருங்கள். முக்கியமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை எளிதில் குறைக்கும் சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. உங்களுக்கு கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறதா? அப்படியென்றால் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்.
வெந்தயம்: வெந்தய விதைகளை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல தீர்வாகும். வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள். தினை : தினை கொலஸ்ட்ரால் அளவை விரைவாகக் கட்டுப்படுத்துகிறது. தினையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சமைத்து உண்ணலாம். வேகவைத்த கொண்டைக்கடலை: வேகவைத்த கொண்டைக்கடலையில் இரும்பு, துத்தநாகம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. கொண்டை கடலை உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதுடன் எடையையும் குறைக்க உதவுகிறது.