தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி – 1 கப்
உளுந்து – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – 1 tsp
பெருங்காயத்தூள் – 1/2 tsp
எண்ணெய் – 200 கிராம்
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – 1 கைப்பிடி
செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். ஊறியதும் மீண்டும் ஒரு முறை அலசிவிட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அந்த மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி , பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட வேண்டும். பின் அவை பொன்னிறமாக மாறியதும் கிண்ணத்தில் எடுத்து போட வேண்டும். அவ்வளவுதான் கார போண்டா தயார்.