மழை பெய்யும் நாட்களிலும், சண்டே ஸ்பெஷல் டின்னரிலும் ரோட்டு கடை சிக்கன் பக்கோடா என்றாலே நாக்கில் நீர் ஊறும். கடையில் சுவை அதிகமா இருக்கும் காரணம் என்ன தெரியாம இருந்தாலும், வீட்டிலேயே அதே சுவையை ஆரோக்கியமான முறையில் செய்வது சாத்தியமே. சிக்கனின் நறுமணம், மசாலாவின் கார சுவை, குருமுறுக்கும் தன்மையோடு வீட்டிலேயே ரோட்டு கடை ஸ்டைல் சிக்கன் பக்கோடா செய்யலாம்.

இதற்கான முக்கிய பொருட்கள் – 500 கிராம் சிக்கன், 2 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் கார்ன் பிளார், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர். இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலக்கி, கழுவிய சிக்கனை அதில் ஊற வைத்து குறைந்தது 2 மணி நேரம் வைக்க வேண்டும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். இதன் நடுவில் சிறிது கருவேப்பிலை தூவி விடலாம்; அது சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
சூடாக எடுத்த சிக்கன் பக்கோடாவை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறினால் ரோட்டு கடை சுவையே வீட்டிலேயே கிடைக்கும். இதை சாயங்கால சிற்றுண்டியாகவோ, விருந்தினர்களுக்கான ஸ்பெஷல் டிஷ் ஆகவோ செய்து பரிமாறலாம்.