தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு – 1
எண்ணெய் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
முட்டை – 1
உப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள வேண்டும். பின் துருவிய உருளைக்கிழங்கை நீரில் 2 முறை அலசி, அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லியையும் தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ளதை அப்படியே பேனில் ஊற்றி பரப்பி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அதை அப்படியே திருப்பிப் போட்டு, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்.