
சண்டே சமையலுக்கு காரசாரமும் புளிப்பும் கலந்த சுவை தரும் சூடை மீன் குழம்பு ஒரு சிறந்த தேர்வாகும். முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகு, மிளகாய் பொடி, காஷ்மீர் மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, மல்லி பொடி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும்.

மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கருவேப்பிலை, சிறிது உப்புடன் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாக்கவும். அதன் பின் அரைத்த மசாலாவை சேர்த்து, புளிக்காக புளி கரைசல் மற்றும் தேவையான தண்ணீரை ஊற்றி நன்றாக கிளறவும்.
இதனை பத்து நிமிடங்கள் வேகவைத்த பிறகு தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக சூடை மீனைச் சேர்த்து, சிறிது நேரம் வேகவிட்டு, மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும். மண்சட்டியில் சமைப்பதால் சுவை கூடுதலாகும். சாதம், இட்லி அல்லது தோசையுடன் இந்த மீன் குழம்பு செம்மையாக இருக்கும். குடும்பத்துடன் சுவைத்தால் அசத்தலான அனுபவம் கிடைக்கும்.