தினமும் ஒரே சப்பாத்தை சாப்பிட்டு சோர்வாக இருக்கிறீர்களா? சற்றே வித்தியாசமான முறையில், சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தி சப்பாத்தியை வித்தியாசமான சுவையில் செய்யலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நமது செரிமானத்தை சீராக வைத்து பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், சர்க்கரைவள்ளிக்கிழங்கின் இனிப்பு சுவை சப்பாத்திக்கு இனிப்பு சுவையை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
2 சர்க்கரைவள்ளிக்கிழங்கு
1 கப் கோதுமை மாவு
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்கு சுத்தம் செய்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வேகவைத்த சர்க்கரை வள்ளியை தோல் நீக்கி நன்கு மசிக்கவும். பிறகு, மசித்த சர்க்கரை வள்ளியை கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து பூரி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியில் தட்டவும். ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் தடவி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான சர்க்கரைவள்ளிக்கிழங்கு சப்பாத்தி ரெடி. சர்க்கரைவள்ளிக்கிழங்கின் அளவைப் பொறுத்து கோதுமை மாவின் அளவை சரிசெய்யவும்.
சப்பாத்தியை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிக மெல்லியதாகவோ தேய்க்க வேண்டாம். சப்பாத்தி சமைக்கும் போது தீயை மிதமாக வைக்கவும். இந்த சப்பாத்தி வெங்காயம், சட்னி அல்லது தயிர் உடன் நன்றாக இருக்கும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு சப்பாத்தி சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.