சென்னை: இருமல், சளி போன்றவற்றை போக்கும் குணம் கொண்டது
தூதுவளை. இந்த இலையில் துவையல் செய்து சூடான சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தேவையானவை: முள் நீக்கிய தூதுவளை இலை – 50 கிராம், பச்சை மிளகாய் – 4, சீரகம் – 5 கிராம், உப்பு, புளி, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தூதுவளை இலையை நன்றாக வதக்கவும். அதனுடன் மற்றப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். அருமையான சுவையில் தூதுவளை துவையல் ரெடி. இதை சூடான சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் உயர்வடையும்.
இதனால் ஏற்படும் மருத்துவப் பயனையும் தெரிந்து கொள்ளுங்கள். சளிப்பிரச்னைக்கு அருமையான மருந்து இது. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, தொண்டைச் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும்.