அவல் கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
அவல் – 2 கப்.
தண்ணீர் – 3 கப்.
வெல்லம் – 1 கப்.
உப்பு – 1 சிட்டிகை.
நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
முந்திரி-10
திராட்சை -10
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்.
அவல் கேசரி செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து 10 முந்திரி, 10 திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இப்போது அதே கடாயில் 2 கப் கெட்டி அவல் சேர்த்து வறுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், 1 சிட்டிகை உப்பு, அரைத்த அவலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொதித்ததும் 1 கப் வெல்லம் சேர்த்து நன்கு மசிக்கவும். இப்போது அதில் சிறிதளவு நெய் ஊற்றி வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கினால் சூப்பரான சுவையான அவல் கேசரி ரெடி.