சென்னை: குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக தேன் ஐஸ்கிரீம் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
முட்டை வெள்ளைக்கரு – 5
பால் – 1/2 லிட்டர்
கிரீம் – 1/4 லிட்டர்
தேன் – 1-1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: முட்டையையும் தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும். அதன் பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும். இதில் பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும்.
இதனை தீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும். இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறைய வைக்கவும். அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.