சென்னை: வித்தியாசமான ருசியில் வெஜ் பரோட்டா சிப்ஸ் செய்ோம் வாங்க.
தேவையானவை:
பரோட்டா – ஒன்று (நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி (உலர் வெந்தயக்கீரை) – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பரோட்டா செய்த உடனே தயாரிப்பதானால் அப்படியே துண்டுகளாக்கவும். பரோட்டா உலர்ந்து போயிருந்தால் ஆவியில் சில நிமிடங்கள் வேகவைத்து எடுத்த பிறகு துண்டுகளாக்கவும். கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு உப்பு, தண்ணீர், ஓமம், மிளகுத்தூள் சேர்த்துக் கரைக்கவும்.
இதை பரோட்டா துண்டுகளின் மீது பரலவாக ஊற்றிப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிசிறி வைத்துள்ள பரோட்டா துண்டுகளை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும் (அப்படியே மொத்தமாக எடுத்துப்போட்டுப் பொரித்தால் மொறுமொறுப்பாக வராது).
அதனுடன் சாட் மசாலாத்தூள், உலர் வெந்தயக்கீரை தூவிக் கலக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி சாப்பிடும் முன் எடுத்துப் பரிமாறவும். அப்போதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.