சென்னை: சுவையான ஸ்டப்டு ரோல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
கோதுமை மாவு – 1 கப்,வெங்காயத் தாள் (நறுக்கியது) – கால் கப்,பச்சை மஞ்சள் துருவல் – அரை கப்,இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,அம்சூர் பொடி – 1 டீஸ்பூன்,ஓமம் – அரை டீஸ்பூன்,உப்பு, எண்ணெய் – தேவைக்கு,மயோனீஸ் – சிறிதளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் துருவல், வெங்காயத் தாள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். இதனுடன் அம்சூர் பொடி (மாங்காய் பொடி), உப்பு, ஓமம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி வையுங்கள்.
ஆறியதும் இந்தக் கலவையைக் கோதுமை மாவுடன் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கங்களும் நன்றாக வேகவைத்து எடுங்கள். இந்தச் சப்பாத்தியின் மேல் மயோனீஸ் சாஸ் தடவி, பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டி, சிறு துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.